Need a 100% Vegan, AllNatural & Vegetarian alternative to traditional Gelatin? 👉 ‘Meron Agar Agar’ is your solution! Meron Agar Agar, brought to you by Marine Hydrocolloids – the largest manufacturer & exporter of quality #AgarAgar in India, provides you with a plant-based gelling, thickening, binding & stabilizing agent. 🔸Gluten Free, 🔸Non GMO 🔸Zero Calorie & Full of fibre. It is integral in a multitude of fields & applications. Meron Agar Agar is the answer to all your gelling ingredient needs. Watch the video to learn more about this brilliant product & its applications! Available across India via www.Amazon.in and www.flipkart.com & Available across the world via www.Amazon.com and www.ebay.com
து.மு.சுதர்சனராஜு
தாய்ப்பால் குடிக்காத குழந்தை கூட இந்த உலகில் உண்டு ஆனால் ரொட்டி உண்ணாத குழந்தை என்று யாருமே இல்லை. இதுவே அடுமனை(பேக்கரி) பொருட்களின் மேன்மையை நமக்கு உணர்த்தும். நம்முடைய மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் முக்கிய பங்காற்றுவது கேக் எனப்படும் பேக்கரி பலகாரம் ஆகும் .பேக்கரி தொழிலில் சிறப்புடன் செயலாற்றுவது குறித்து இந்திய பேக்கரி சங்கத்தின் தென்னக பகுதி பொருளாளர் பாலமுருகன் அவர்கள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார் .இது பேக்கரி தொழிலில் நல்ல முன்னேற்றத்தை அடைய நிச்சயம் உதவும் .
“பேக்கரி தொழில் என்பது காலம் காலமாக செயல்பட்டு வருவதாகும். தற்போது வேண்டுமானால் சிறிதளவு இறக்கத்தினை சந்தித்து இருக்கலாம். இது நிச்சயம் நிரந்தரமானதல்ல பழைய நிலைக்கு விரைவில் திரும்ப வந்துவிடுவோம் “என உறுதிபட தெரிவித்தார் .என்றும் நம்முடைய வாடிக்கையாளர்களின் குறிக்கோளினை நிறைவேற்றுவதே நமது முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும் அதனை இன்னும் மேம்படுத்த ‘வணிகர்களுக்கு வணிகம்’ என்னும் முறைக்கு நாம் மாறினால் நல்ல லாபத்தை ஈட்டலாம் என கூறினார் உற்பத்தி தொழிற்சாலை என்பது அனைவராலும் செயல்படுத்த இயலாது.வணிகர்களுக்கு வணிகம் முறை நம்முடைய உற்பத்தி பொருள்களை பல்வேறு வகைகளில் மக்களை சென்றடைய உதவும் வழியாகும் .
எப்போதும் மக்களின் தேவை சார்ந்தபொருள்களைத் தயாரிக்க வேண்டும் .மக்களுக்கு புதுப்புது பேக்கரி பொருள்களை தேவைக்கேற்ப அறிமுகம் செய்வதும் நல்ல முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என தெரிவித்தார்.”இயக்க நடைமுறை ,தரவு பகுப்பாய்வு முதலியவை நம்முடைய பேக்கரியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் .தற்போது சில பேக்கரிகள் தங்கள் தொழிலை செயல்படுத்த முடியாமல் அதிலிருந்து விலகியிருப்பார்கள்.வரும் காலங்களில் பெரும் பற்றாக்குறையானது ஏற்படும் அதனை ஈடு செய்யும் வகையில் உறுதியான திட்டமும் தொழில் நேர்த்தியும் இருந்தால் சாதித்துவிடலாம்”என நம்பிக்கையுடன் கூறினார்.
வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்ளும் முயற்சிகளை நாம் எப்போதும் மேற்கொண்டு கொண்டே இருக்க வேண்டும் . தொழிலாளர் நலன் எவ்வாறு உற்பத்திதனை மேம்படுத்துமோ அதுபோல வாடிக்கையாளர்களின் நலன் நம்முடைய லாபத்திற்கு மூலதனம் ஆகும் என்றார் . பேக்கரி பொருள்கள் குறித்து சந்தைப்படுத்தல் , அதற்கு ஏற்றவாறு பணியாளர்களுக்கு பயிற்சி அளித்தல் மிகவும் முக்கியமாதாகும்
. நல்ல வருமானத்தை பேக்கரி தொழில் நிச்சயம் பெறமகசூல் கணக்கீடு மேற்கொள்ளலாம்.அனைத்தும் காகித ஆவணங்களாகவும் , நுகர்வு மற்றும் வெளியீடு கணக்காக அமைவது முக்கியமானதாகும் .
மனதளவில் ஒரு மகிழ்ச்சிதனை ஏற்படுத்துவது பேக்கரி தொழில்.ஏனென்றால் “ஆயிரம் கேக்குகள் உற்பத்தி செய்து சந்தையில் விற்பனையானால் ஆயிரம் குடும்பங்களின சந்தோஷத்தில் நானும் ஒருபங்காற்றிய மகிழ்ச்சி எனக்கு ஏற்படும்”என பாலமுருகன் மனநிறைவோடு கூறுகிறார்.
வேகமாக நகரும் நுகர்வோர் பொருட்கள் கடந்த காலங்களில் மட்டும் சுமார் 13 கோடி ரூபாய் லாபத்தினை பெற்றுள்ளது இனிவரும் காலத்தில் இதனை விட அதிக லாபத்தை அடைவதற்கு வலைஅமைப்பு மிகவும் முக்கியம்.அனைவரும் தங்களின் சந்தை சார்ந்த மற்றும் தொழில் சார்ந்த ஒரு கூட்டமைப்பாக செயல்படுவது பேக்கரி தொழில் சிறப்பாக செயல்பட வழியாக இருக்கும் என தெரிவித்தார்.
THIS ARTICLE IS POWERED BY MERON. For samples, call Krishnakumar-+91 98957 67366