-து. மு. சுதர்சனராஜூ
கோவிட் 19 மனித குலத்தை அச்சுறுத்தி வருகிறது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் வேலையில்லாமலும் உணவு இல்லாமல் தவித்து வருகின்றனர்.
இவற்றைக் கருத்தில் கொண்டு சென்னை உணவகங்கள் சங்கம் (Chennai Hotels Association) பல்வேறு உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறது .சென்னை உணவகங்கள் சங்கம் சென்னையில் உள்ள 10 லட்சத்திற்கும் அதிகமான ஏழை எளிய மக்களுக்கு இலவச உணவுகளை வழங்கி சாதனை புரிந்துள்ளது .இதுகுறித்து சென்னை உணவகங்கள் சங்கத்தின் செயலாளர் ஆர் .ராஜ்குமார் ஷெப் பாரத் இணையதளத்திற்கு அளித்த தொலைபேசி உரையாடலின் பொழுது ‘கோவிட்-19’ காலகட்டத்தில் பல்வேறு மக்கள் பசியால் வாடி வருகின்றனர்.அது எங்களுக்கு வேதனை அளித்தது.எங்களால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என முடிவெடுத்தோம். பல்வேறு உணவு நிறுவனங்கள் தங்களது மாபெரும் பங்களிப்பை அளித்து உதவி புரிந்தனர்.
எங்கள் நிறுவனத்தில் உள்ள 80 க்கும் அதிகமான ஊழியர்கள் இதற்கு முழு ஒத்துழைப்பு அளித்தனர். சமையல் கலைஞர்கள்,தன்னார்வலர்கள் ,காவல்துறையினர் என அனைவரும் ஒன்றிணைந்து இந்த உதவியை மக்களுக்கு புரிந்தோம்.அனைத்து நிலைகளிலும் நாங்கள் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை வழிமுறைகளை பின்பற்றினோம்.ஏனென்றால் சென்னையில் தொற்று அதிகமாக பரவி வருகிறது. ஆனால் மக்கள் உணவில்லாமல் தவித்து விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு நாங்கள் இதனை செயல்படுத்தினோம் ,தேவைப்படுவோருக்கு உணவு வழங்க வேண்டும் என்பதே எங்களின் தலையாய கடமையாகக் கொண்டு இந்த கோவிட் 19 காலகட்டத்தில் செயல்பட்டு வருகின்றோம் எனவும் கூறினார்.
மேலும் இதுகுறித்து சென்னை உணவகங்கள் சங்கத்தினை சேர்ந்த வேணுகோபால் அவர்கள் கூறும்போது,”சென்னையில் மட்டும் இதுவரை 10 லட்சத்திற்கும் அதிகமான உணவுகளை ஏழை எளிய மக்களுக்கு விநியோகித்துள்ளோம். பல்வேறு உணவு நிறுவனங்கள் உதவி புரிந்துள்ளனர்” எனவும் அவர் தெரிவித்தார்.
இது மட்டுமில்லாமல் கோவிட் 19 விழிப்புணர்வு வழிமுறைகளையும் வெளியிட்டு மக்கள் நலனில் அக்கறை கொண்டுள்ளனர். இந்த கோவிட் 19 காலகட்டத்தில் நாயகர்களாக செயல்பட்டு வரும் காவலர்களை கருத்தில் கொண்டு உணவுகளை வழங்கி வருகின்றனர் . இவ்வாறு சிறப்பாக செயல்பட்டு வரும் சென்னை உணவகங்கள் சங்கத்தினை பாராட்டி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாடு உணவகங்கள் சங்கத்தின் இந்த தன்னார்வ தொண்டு அனைத்து தரப்பு மக்களின் பாராட்டினை வெகுவாக பெற்றுள்ளது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இது குறித்து தனது சமூக ஊடக கணக்கில் தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் சிப்பிணி போக்கும் சேவையை தொடர்ந்து வரும் இக்கூட்டமைப்பை பாராட்டி உள்ளார்.
கௌரவத் தலைவர் ஏ.ராமதாஸ் ராவ், கே.டி ஸ்ரீனிவாச ராஜா , தலைவர் எம்.ரவி , செயலாளர் ஆர். ராஜ்குமார் , பொருளாளர் என். செந்தில்குமார் அனைவரும் சென்னை ஹோட்டல் சங்கத்தில் முக்கிய பங்காற்றி மக்களுக்கு உதவிகளை செய்து வருகின்றனர்.