து .மு .சுதர்சனராஜு
“தேசிய கல்விக் கொள்கையில் சமையல்கலையின் முக்கியத்துவம்” குறித்த குழு விவாதத்தை செஃப் பாரத் நடத்தியது. பள்ளி மாணவர்களுக்கு கொண்டுவரப்பட வேண்டிய சமையல் கல்வியின் முக்கியத்துவம் குறித்த அமர்வில் பல்வேறு சமையல்கலை நிபுணர்கள் கலந்து கொண்டு பேசினார்கள் .குழு விவாதத்தில் பங்கேற்ற சமையல்கலைஞர்கள் பல்வேறு பின்னணியிலிருந்தும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கலந்துகொண்டனர் .
ஜி.எச். ரைசோனி பள்ளி விருந்தோம்பல்துறை நிர்வாகத்தின் முதல்வர் ரவிசங்கர் மிஸ்ரா கூறும் போது ,”உணவுகளை உருவாக்குவதில் இளம் குழந்தைகள் ஆர்வமும் ,புதுமையான தன்மையும் கொண்டிருப்பார்கள் . 5 அல்லது 6 ஆம் வகுப்பு முதல் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியில் சமையக்கலை குறித்து கற்பிக்கலாம் .6 முதல் 10 வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு சமையல்கலை குறித்த எளிமையான புரிதலை தொடங்க இதுவே சரியான தருணம். நிபுணத்துவம் பெற்றவர்கள் குறைந்த அளவே இருப்பதால் பள்ளிகள் ஆழமாக கற்று தர வேண்டும் .இது கற்றலை வலு படுத்த உதவும் . சமையல் கல்வியின் தரமானது பள்ளி முதல் கல்லூரி வரை மாணவர்களை மேம்படுத்தும் நிலையில் இருக்க வேண்டும் .”என்று கூறினார் .
சமையல்கலை கல்வியாளர் ஷாலோமை சேர்ந்த ரமேஷ் பி ஜாவ்வாஜி தெரிவிக்கையில் , “இளைஞர்களுக்கு சிறு வயதிலேயே ஊட்டச்சத்து மதிப்பு பற்றிய கல்வி மற்றும் சமையல் தொழிற்கல்வி கற்பிக்கப்பட வேண்டும். பள்ளிகளில் தற்போது கற்பிக்க தொடங்கினால் தான் வருங்காலத்தில் உலகளாவிய தரத்தை பூர்த்தி செய்யும் சமையல்கலைஞர்களை உருவாக்க இயலும்.1 ஆம் வகுப்புக்கு முன்பே குழந்தைகளுக்கு சமையல் கோட்பாட்டின் ஒரு பகுதியும் ஊட்டச்சத்து உணவு குறித்தும் கற்பிக்கலாம் , ஊட்டச்சத்தான உணவு இல்லாமல் ஒருவர் வாழ முடியாது என்பதை தெளிவு படுத்த இதனை மேற்கொள்ள வேண்டும்.இந்திய சமையல் கல்வியை உலகளாவிய தரங்களுக்கு மேம்படுத்தவும் பாரதத்தில் உணவக மேலாண்மை மற்றும் சமையல்கலை பயிற்சி இன்னும் உயர்ந்த நிலைக்கு எடுத்து செல்லவும் , அடித்தளம் அமைக்கவும் சமையல்கல்வியை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும் ” என்றார் .
சமையல்கலைஞர் பிரவிந்தர் சிங் பாலி கூறும் போது, “சமையல்கல்வியின் முக்கியத்துவம் தற்போது அதிகரித்து வருகிறது. பள்ளி பாடத்திட்டத்தில் கொண்டு வருவதன் மூலம் நல்ல புரிதலுடன் வருங்கால சமையல்கலை வல்லுநர்களை உருவாக்க இயலும் .பள்ளிகளில் விருப்ப பாடமாக சமையல் பாடத்திட்டைத்தை மாற்றி அமைத்தால் உலக அளவில் உள்ள தலை சிறந்த மாணவர்களுக்கு நிகராக இந்தியா மாணவர்களையும் மேம்படுத்த இயலும் சமையல்கலை கல்வி வாழ்வை மேம்படுத்தும் தொழிலாக தற்போது உருவாகி வருகிறது .மாணவர்கள் பிரபல சமையல் கலைஞராக விருப்பம் கொண்டு களத்தில் நுழைந்து தொழில்துறையில் தங்களை மேம்படுத்த முடியாமல் கிட்டத்தட்ட 40% மாணவர்கள் வெளியேறுகிறார்கள்.இது மாற பள்ளி பருவத்திலேயே சமையல்பாடத்திட்டத்தை கொண்டு வர வேண்டும் “என்றார் .
NIPS பள்ளியை சேர்ந்த சமையல் கலைஞர் மௌமிதா பயூமிக் பேசுகையில் ,”ஆண்களுக்கு நிகராக பெண்களும் சமையல் துறையில் சாதித்து வருகின்றனர் . அனைவரும் சமம் என்ற நிலைப்பாடு சமையல் துறையில் மேலோங்க வருங்ககால தலைமுறைக்கு எடுத்துரைக்க பள்ளிகளிலேயே சமையல் கல்விதனை போதிக்க வேண்டும் .உடல்நலனில் வருங்கால தலைமுறையினர் நலம் காண சமையல் கல்வியை போதிப்பதே நல்லது .சமையல் துறை பற்றி மேலோட்டமாக இல்லாமல் மாணவர்களின் ஆர்வம் சார்ந்த நுட்பங்களை வளர்க்கும் வண்ணமாக அமைக்க வேண்டும். பயிற்றுவிப்பாளர்களுக்கு போதுமான கள அனுபவமும் இருப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும் இது வருங்கால திறன்மிக்க சமையல்கலைஞர்களை உருவாக்க இயலும் “என தெரிவித்தார் .
நாக்பூரை சேர்ந்த மூத்த விரிவுரையாளர் நிதின் ஷெண்டே கூறுகையில் ,”பாட கல்விதனை பள்ளிகளில் பயிற்றுவிக்கிறார்கள் ,ஆனால் அதனை விட முக்கியமானது சமையல்கலை கல்வி . 7 அல்லது 8 ஆம் வகுப்புகளில் பயிற்சியைத் தொடங்கலாம். பேக்கரி, மிட்டாய் போன்ற அடிப்படை சமையல் பாடங்கள் அறிமுகப்படுத்தினால் மாணவர்களின் சமையல் கல்வியின் ஆர்வம் அதிகரிக்கும் .பள்ளிகளில் சமையல்கல்வியை வழங்குவதால் நல்ல ஆக்கப்பூர்வமான சமுதாயதிற்கு பலன் தரும் உணவை இந்திய சமையல் கலைஞர்களே உருவாக்குவார்கள் . சர்வதேச தரத்திற்கு இணையாக இந்திய சமையல் பள்ளிகளை உருவாக்க உழைக்க வேண்டும்” என நிதின் கூறினார் .
சமையல் கல்விக்கான புதிய தரநிலைகளையம் பள்ளிகளையும் மேம்படுத்தினால் மட்டுமே இனி வரும் காலங்களில் சிறந்த சமையல் கலைஞர்களை உருவாக்க இயலும் .ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளி மட்டங்களில் அடிப்படை சமையல் கல்வியைச் சேர்க்க முக்கியத்துவம் தர வேண்டும் அனைவரும் ஒருமித்த கருத்து தெரிவித்தனர் .