உணவே மருந்து எனும் சொற்றொடர் இக்காலத்தில் மாறி மருந்தையே உணவாக உண்ணும் வாழ்வியலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம்.. “பாட்டி வைத்தியம்” இதில் இல்லாத சிறப்புகளை இல்லை. அனைத்து இயற்கை மருத்துவ குணங்களை அறிந்த நம் முன்னோர்கள் அனைத்து வகையான நோய்களுக்கும் மூலிகைகளை குறிப்பிட்டுள்ளனர். வீட்டிலேயே இயற்கையான முறையில் தயாரிக்க முடியும் என்பது இதன் முக்கியத்துவம் ஆகும்.தற்போதைய விஞ்ஞான வளர்ச்சியில் இது குறித்து நாம் சிந்திப்பதும் இல்லை உபயோகப்படுத்துவதுமில்லை. மருந்து ,மாத்திரை என ஆங்கில மருத்துவத்திற்கு தாவிக்கொண்டு வருகிறோம்.இதனை விட இயற்கையாக முன்னோர்கள் கூறிய உணவுப் பொருள்களை நாம் நம் வாழ்வோடு சேர்ந்து வந்தால் ஆரோக்கியமான வாழ்வைப் பெறலாம்.
வீட்டில் வளர்க்கும் மூலிகைகளை காய வைத்து பதப்படுத்தி பல்வேறு வழிமுறைகளை பின்பற்றி பல மூலிகை பொடிகளை தயாரித்து வருகிறார் .இனிவரும் காலங்களில் தினமும் சத்தான உணவையும், ஆயுர்வேத மூலிகை பொடிகளையும் சேர்த்து கொள்வதால் நாம் ஆரோக்கியமான வாழ்வைப் பெறலாம். இவர் தயாரித்து வரும் இந்த மூலிகைப்பொடிகள் சளி,இருமல்,வயிற்றுக்கோளாறு, உடல் உபாதைகள் போன்றவற்றை போக்கி ஒரு ஆரோக்கியமான வாழ்வை உருவாக்குவதற்கு உதவுகிறது.
இதனையே நம் முன்னோர்கள் பின்பற்றி வந்துள்ளனர். தினமும் உணவில் ஆரோக்கியமான ஆயுர்வேத மூலிகை பொருட்களை பயன்படுத்தினால் பக்க விளைவுகள் தரும் ஆங்கில மருந்துகளில் இருந்து தப்பிக்கலாம். இவர் உருவாக்கியுள்ள மூலிகைை பொடிகளை கொண்டு பானம் தயாரித்துக் குடிப்பதால் உடலுக்கு நன்மை ஏற்படுவதுடன் செலவையும் குறைக்கலாம். இயற்கையான முறையில் தயாரித்து குடிப்பதால் உடலின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம் என்பது நிதர்சன உண்மை.