உணவு மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முதலாவது.” உணவே மருந்து “என்பது ஆன்றோரின் வாக்கு .இதனை உணர்ந்து அழகிய உணவினை விட ஆரோக்கியமான உணவிற்கு முக்கியத்துவம் தர வேண்டும். அதற்கான காலகட்டமும் நெருங்கிவிட்டது.நம் பெரும்பாலானோரின் மனநிலை காண்பதற்கு அழகான உணவிலேயே விரும்பும் கொள்ளும். இனிவரும் காலம் அவ்வாறு இருக்க முடியாது என்பதை கொரோனா நமக்கு உணர்த்தி விட்டது.
இந்திய சமையல் இளைஞர்கள் அலங்காரம் மட்டுமல்ல ,ஊட்டச்சத்து அம்சத்திலும் கவனம் செலுத்த வேண்டும் இதுவே இந்திய சமையல் கலைஞர் ராஹுல் வாலியின் முக்கிய குறிக்கோளாகும்.மற்றும் மக்களுக்கு ஆரோக்கியம் சார்ந்த விழிப்புணர்வுதனை ஏற்படுத்த பிராந்திய உணவுப் பொருட்கள் பற்றிய தகவல்களைச் சேகரிக்க தொடங்கினார்.பிராந்திய தொழில்முறை சமையல் கலைஞர்களை ஒன்று திரட்டி. உள்ளூர் மற்றும் பிராந்திய விளைபொருட்களைப் மீதான ஆர்வத்தை மேம்படுத்தினார். ‘துரிதமற்ற உணவு இயக்கம்’ (Slow Food Movement) தனை ஜூன் முதல் வாரத்தில் தொடங்கி உத்தரகாண்ட் முதல் மிசோரம் வரை நடத்தி சாதனை புரிந்தார். இந்த அமர்வில் பிராந்தியத்தின் வரலாறு, உணவுகள் மற்றும் சிறப்புகளை வெளிக்கொணர்ந்தார். இதில் முப்பது வெவ்வேறு பிராந்திய சமையல் கலைஞர்கள் பணியாற்றி பல்வேறு பிராந்தியங்களின் உணவு சிறப்பினை வெளிக்கொணர்ந்து உள்ளனர்
சமையல்கலை வல்லுனர் ராகுலும் இளம் சமையல் கலைஞர்களும் சேர்ந்து பல்வேறு பழங்குடி பொருள்களை பயன்படுத்தி பல்வேறு ஆரோக்கியமான உணவு வழிமுறைகளை கண்டறிந்துள்ளனர்.ஒரு வல்லுனராக ராஹுல் பல்வேறு பிராந்திய உணவுகள் குறித்து அறிந்து விழிப்புணர்வினை ஏற்படுத்தி விட்டார் என்றே கூறவேண்டும்.
ஆனால் பல இந்திய சமையல் கலைஞர்கள் ஊட்டச்சத்து அம்சத்தை பின்னுக்குத் தள்ளி உணவை அலங்கரிப்பதில் கவனம் செலுத்துகின்றனர் என்பதை ராகுல் கண்டறிந்தார். இதுகுறித்து ராஹுல் தெரிவிக்கும் போது, “அலங்கரித்தல் மற்றும் விளக்கக்காட்சி முக்கியம். இருப்பினும், சத்தான மதிப்பு ஒரு சமையல்கலைஞரின் முன்னுரிமையாக இருக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, நம்மில் பெரும்பாலோர் உணவின் தோற்றத்திற்குப் பின்னால் செல்கிறோம் இது மாற வேண்டும்”.
சத்தீஸ்கரை சேர்ந்த சமையல்கலைஞர் திஷா ஜெயின் அவர்கள் ஆரோக்கியமான வழிமுறைகள் குறித்து கூறும்போது,” கருப்பு அரிசியில் பல்வேறு நன்மைகள் உள்ளன , இனி வரும் காலங்களில் உணவு முறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும்” என தெரிவித்தார். ராகுல் அவர்களின் முயற்சியால் உள்ளூர் மக்களின் உணவு உற்பத்தியிலும் விவசாயத்திலும் ஒரு எழுச்சி ஏற்பட்டுள்ளது.
ராஹுல் எதிர்கொண்ட முக்கிய சவால்களைப் பற்றி கூறும்போது, “பல பிராந்திய சமையல் கலைஞர்களிடம் நிறைய சமையல் குறிப்புகள் இல்லாததால் கடினமாக இருந்தது” என தெரிவித்தார் அலங்காரத்தை விட ஊட்டச்சத்து அம்சத்தில் கவனம் செலுத்துங்கள் என்றார் .
இந்திய உணவுதனில் ஆயுர்வேதம் ஆனது இரண்டறக் கலந்துள்ளது அதனை புரிந்து ஆரோக்கியமான பிராந்திய உணவுக்கு முதல் முக்கியத்துவத்தை வழங்குவதே அடுத்த தலைமுறையினர் பண்டைய உணவு வகைகளை ஒருபோதும் மறக்காமல் இருக்க வழிகோலும். “சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய இயலும்”இதில் உடல் என்னும் சுவரை காக்க ஆரோக்கியமான இந்திய பிராந்திய உணவே எப்போதும் துணை நிற்கும் என்பதை சமையல் கலை வல்லுநர் ராகுல் அவர்கள் வெளிப்படுத்தி விட்டார். இனி முடிவெடுப்பது நம் கையில்.