-சுதர்ஷன ராஜு
மனிதர்களின் முக்கிய வாழ்வாதாரம் மற்றும் அடிப்படைத் தேவை உணவினை சார்ந்தே அமைந்துள்ளது. சத்தான உணவினை பெறுவது என்பது மனிதனின் வாழ்வினை மேம்படுத்த உதவும் முக்கிய காரணியாக விளங்குகிறது.
சத்தான உணவினை உற்பத்தி செய்வதும் , இயற்கையினை காக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதும் பாராட்டத்தக்க செயலாகும். இதுகுறித்து கோயம்பத்தூரை சேர்ந்த ‘பிரிஸ்ட்டா‘ நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் சசிகுமார் சிவசுப்பிரமணியம் அவர்கள் ‘செப் பாரத்‘ உடன் தொலைபேசி உரையாடலின்போது பின்வரும் கருத்துக்களை தெரிவித்தார்.
அனைத்து தரப்பு மக்களும் ,விவசாயிகளும் பயன்பெறும் வகையில் நாங்கள் உணவுத் துறையில் சில மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளோம். மறுசுழற்சி மூலம் உணவு வீணாவதைத் தடுத்து வருகின்றோம். வீட்டிலுள்ள பெண்மணிகள் இயற்கை விவசாயம் குறித்து அறிந்து கொள்ளவும் நாங்கள் பயிற்சி பட்டறைகளை நடத்தி வருகின்றோம் .அதில் இதுவரை 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு பயன் பெற்றுள்ளனர்.
நாங்கள் முக்கியமாக மறுசுழற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றோம். விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில் இது குறித்து மேலும் ஆராய்ச்சி செய்து வருகிறோம் .
மனிதனுக்கு மிகவும் முக்கியமானது சத்தான உணவாகும். இது சிறு தானியங்களில் அதிகம் உள்ளது இது குறித்து மக்கள் விழிப்புணர்வு அடையும் பொருட்டு நாங்கள் கம்பில் உள்ள சத்துக்களை மக்கள் பெற வேண்டும் என்பதால் அது சார்ந்தபொருள்களை செய்து வருகின்றோம். இதனை இணைய வர்த்தகம் மூலமும் நேரடி விற்பனையிலும் செய்து வருகின்றோம்.
சிறுதானியம் ஆன கம்பு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து மக்களை இந்த கோவிட் 19 காலத்திலிருந்து பாதுகாக்கும். இயற்கையை காப்பது என்பது எங்களின் முக்கிய நோக்கமாகும் .இதனை கருத்தில் கொண்டே நாங்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றோம்.இந்த காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி என்பது அத்தியாவசியமான ஒன்றாகும் இது சிறு தானியங்களில் அதிகம் உள்ளது . சிறுதானியமான கம்பு முதலியவற்றை சத்தான முறையில் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதால் மக்கள் நோய் எதிர்ப்பு சக்தியினை பெற்று நல்ல ஆரோக்கியத்துடன் வாழ இயலும் . மற்றும் பல்வேறு உற்பத்திப் பொருட்களாக தேனீர் மற்றும் காபி பொடிகள் முதலியவற்றையும் உற்பத்தி செய்து வருகின்றார் .டிஜிட்டல் லாக்கிங் சிஸ்டம் மூலம் மக்களுக்கு பாதுகாப்பு சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்து வருகின்றார். இவர் மக்களுக்கு உதவிடும் வகையில் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த பொருட்களை சத்தான முறையில் மக்களுக்கு கொண்டு சேர்ப்பது குறித்து ஆராய்ச்சியும் செய்து வருவதாகவும் தெரிவித்தார்.