
-ஐஸ்வர்ய லெக்ஷ்மி (தமிழாக்கம்-து.மு.சுதர்சனராஜு )
“ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது ,பயிற்சியே நம்மை பட்டை தீட்டி வைரமாக ஜொலிக்க செய்யும்” ,என்பதே தற்போதுள்ள காலம் உணர்த்திவிட்டது . இந்த தொற்றுநோய் விருந்தோம்பல் மற்றும் சுற்றுலாத்துறையினை அதிகம் பாதித்துள்ளது என்பதே நிதர்சன உண்மை .
தற்போது அனைத்து விருந்தோம்பல் பள்ளிகளும் மெதுவான தொடக்கத்தையும் குறைவான சேர்க்கைகளையும் எதிர்கொண்டுவருகின்றன .

“இனி வரும் புதிய சவால்களை எதிர்கொள்ள கல்வி நிறுவனங்கள் தங்கள் பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும்” என பாரத் பல்கலைக்கழகத்தின் விருந்தோம்பல் மற்றும் சுற்றுலாத் துறைத் தலைவர் முனைவர் ஆர். சங்கீதா தெரிவித்தார் . மேலும் அவர் பேசுகையில் “இந்த பொது முடக்கத்தில் மாணவர் சேர்க்கை அதிகம் பாதித்துள்ளது ,நிறுவனங்களால் விருந்தோம்பல் மாணவர்களுக்கு நேரடி பயிற்சி அளிக்க முடியாத சூழ்நிலையானது நிகழ்கிறது உள்ளிருப்புப்பயிற்சி(internship) மாணவர்களுக்கு அவசியம் தேவை” என தெரிவித்தார் .
விருந்தோம்பல் மாணவர்களுக்கு பயிற்சி அதிகம் தேவைப்படும். அதனை கட்டாயம் கல்வி நிறுவனங்கள் வழங்க வேண்டும் . இணைய வகுப்புகள் மூலமாக பாடத்தினை வழங்குவதால் மாணவர்களின் திறமையை பெரிதும் உருவாக்க இயலாமல் போக வாய்ப்புள்ளது ,ஏனென்றால் பயிற்சியே மாணவர்களை பட்டை தீட்டும் .இதனை கருத்தில் கொண்டு பாரத் பல்கலைக்கழகம் உள்ளிருப்புப்பயிற்சிதனை(internship) பாடத்திட்டத்தில் சேர்த்துள்ளதாக சங்கீதா கூறினார் .
மேலும் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மிகப்பெரிய வேலைவாய்ப்பு சவால் ஏற்பட்டுள்ளது. விருந்தோம்பல் மாணவர்கள் தங்கள் இறுதி ஆண்டில் உள்ளிருப்புப்பயிற்சி மூலம் பணிக்கு செல்ல வேண்டும். “இந்த ஆண்டு, மாணவர்கள் அந்த பயிற்சியைப் பெறும் சூழ்நிலைநிலையில் இல்லை. நாம் தான் புதிய விதிமுறைகள், ஒழுங்குமுறைகள் மற்றும் மேம்பட்ட நுட்பங்களுடன் புதிய வெளிப்பாட்டை மேற்கொள்ள வேண்டும் “என கூறினார்.
தற்போதைய காலகட்டத்தில் வேலை பெறுவது மிகவும் கடினம் என்பதை அனைவரும் அறிந்து விட்டனர் ,இதில் இருந்து மீள செதுக்குதல் போன்ற பிற சிக்கலான கலைப் பாடத்திட்டத்தில் நிபுணத்துவம் பெறுவதன் மூலம் நல்ல வேலைவாய்ப்பினை பெறலாம் மாணவர்கள் தங்கள் திறமையை மேம்படுத்த வேண்டும்.விருந்தோம்பல் துறையில் உள்ள ஒவ்வொருவரும் தற்போதைய சூழ்நிலையின் தேவைகளை பூர்த்தி செய்ய புதுமையான தங்கள் எண்ணத்தை வழிநடத்துவதில் பணியாற்ற வேண்டும். உதாரணமாக, பன்னாட்டு நிறுவனங்கள் ஊழியர்கள் சிறப்பாக செயலாற்ற பயிற்சிதனை வழங்குகின்றன.
கடந்த 4 மாதங்கள் விருந்தோம்பல் துறையிலும் மக்களின் மனநிலையிலும் நிறைய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது . “இந்த தொற்றுநோய் சர்வதேச தரத்தை நோக்கி விருந்தோம்பல்துறை முன்னேற வழிவகுத்துள்ளது . நல்ல மாற்றத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.இப்போது தூய்மையைக் கண்காணிக்கும் நடைமுறை அனைத்து அம்சங்களிலும் செயல்படுத்து நல்ல முன்னேற்றமாகும் .” என சங்கீதா உறுதிபட தெரிவித்தார் .
விருந்தோம்பல் துறையினை அடுத்த கட்டத்திற்கு உயர்த்த உணவு பட்டியலில் சில மாற்றங்களையும் , சுத்தம் மற்றும் பராமரிப்புக்கு முக்கியத்துவம்தனை கொடுக்க வேண்டும் என தெரிவித்தார். மக்கள் பயணம் செய்யாமல் இருக்க முடியாது என்பதால் விரைவில் விருந்தோம்பல் தொழில் புத்துயிர் பெறும் எனதெரிவித்தார்.