Need a 100% Vegan, AllNatural & Vegetarian alternative to traditional Gelatin? 👉 ‘Meron Agar Agar’ is your solution! Meron Agar Agar, brought to you by Marine Hydrocolloids – the largest manufacturer & exporter of quality #AgarAgar in India, provides you with a plant-based gelling, thickening, binding & stabilizing agent. 🔸Gluten Free, 🔸Non GMO 🔸Zero Calorie & Full of fibre. It is integral in a multitude of fields & applications. Meron Agar Agar is the answer to all your gelling ingredient needs.
Watch the video to learn more about this brilliant product & its applications! Available across India via www.Amazon.in and www.flipkart.com & . Available across the world via www.Amazon.com and www.ebay.com
-ஐஸ்வரியா பிரேம் ( தமிழாக்கம் து .மு .சுதர்சனராஜு)
உலகில் அனைத்து பணியும் உன்னத பணியே . தற்போது மருத்துவர்கள்,சுகாதாரப் பணியாளர்கள் ,காவல்துறையினர் முன்கள பணியாளர்களாக செயல்பட்டு இந்த இக்கட்டான காலத்தில் நம்மை காத்து வருகின்றனர். இவர்களுக்கு ஈடாக சமையல் கலைஞர் ஒருவரும் மகத்தான சாதனை புரிந்து வருகிறார்.
சமையல்தொழில் என்பது சிலருக்கு அவர்களின் அன்றாடசெலவுகளை சமாளிக்கும் பணி . ஒரு சிலருக்கு நல்ல உணவினை தயாரிக்கும் திருப்தி தரும் பணி , ஆனால், இன்னொரு வகையான உன்னத தொழில்களைஞர்கள் உள்ளனர், அவர்களின் தொழில் அவர்களின் வாழ்க்கையாகும், சில சமயங்களில் அவர்கள் தேர்ந்தெடுத்த தொழிலுக்காக எதையும் தியாகம் செய்ய தயாராக இருக்கிறார்கள்.
சமையலறை படைப்பிரிவுக்கு தலைமை தாங்கிய முன்னணி உணவகத்தின் நிர்வாக சமையல்கலைஞர் சீத்தாராம் பிரசாத் சிறப்புடன் செயலாற்றி மாபெரும் சாதனை புரிந்துள்ளார்.பல்வேறு துறைகளைச் சேர்ந்த முன்கள பணியாளர்கள் இந்த நோயிலிருந்து நம்மை காக்க அயராது போராடுகிறார்கள்,அவர்களை கவனித்துக்கொள்ள சூப்பர் நாயகனாக நிர்வாக சமையல்கலைஞர் சீத்தாராம் பிரசாத் செயல்பட்டு வருகிறார் .தொற்றுநோய்களின் போது சென்னையின் முன்கள பணியாளர்களை கவனித்துக்கொள்வதற்கு ஆர்வமுள்ள நட்சத்திரங்களின் குழுவை வழிநடத்திய ஒரு மாபெரும் சமையல்கலைஞரின் கதையை செஃப் பாரத் உங்களுக்கு வழங்குகிறது.
சீத்தாராம் பிரசாத் உண்மையான தலைவராக செயல்பட்டு நேரடியாக அவரே சந்தைகளுக்குச் சென்று காய்கறிகளை வாங்கி உணவு சமைத்துள்ளார் . தொற்றுநோய்களை தடுக்கும் கோட்டையாக இருக்கும் முன்வரிசை வீரர்களுக்கு உணவு வழங்குவதில் தனது உயிரையும் பணயம் வைத்துள்ளார் .அவரும் அவரது குழுவும் கடந்த மூன்று மாதங்களாக ஒவ்வொரு நாளும் சுமார் 2500 முன்னணி தொழிலாளர்களுக்கு சேவை செய்து வந்துள்ளனர் . தனிமைப்படுத்தப்பட்ட முன்னணி தொழிலாளர்களுக்கும் உணவு வழங்கி சேவை புரிந்துள்ளனர் .அப்போது தான் அந்த அதிர்ச்சியான நிகழ்வு நடந்தது , சமையல் கலைஞர் சீத்தாராம் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது .அதிஷ்டவசமாக அவரது குழுவில் வேறு யாருக்கும் தொற்று ஏற்படவில்லை. சீத்தாராம் தன்னை தனிமை படுத்திக்கொண்டார் .அடுத்த இரண்டு முடிவுகள் எதிர்மறையாக வந்த பிறகு தனிமைப்படுத்தலில் இருந்து வெளியே வந்தார் . இருப்பினும், அவரது கடினமான காலங்களில் இந்த தேசத்திற்கு சேவை செய்வதை நிறுத்தவில்லை. தொற்றுநோய்களின் போது ஆதரிக்கும் மருத்துவர்கள் நன்றாக சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தில் உணவு வழங்கும் பணியினை தொடர்ந்து நடத்திட செய்தார் .
முன்கள பணியாளர்கள் நம் தேசத்தின் போற்றத்தக்க வீரர்கள் ,அவர்களுக்காக தங்கள் உயிரையும் பணயம் வைத்து சமையல்கலைஞர்கள் பணிபுரிந்து நம் இந்திய தேசப்பற்றை வெளிப்படுத்தியுள்ளனர் என்பது இதன் மூலம் வெளிப்படுகிறது .
தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு தயாரிக்கும் அனுபவம் குறித்து கூறும் போது ,”அனைவரின் உடல்நலனின் தேவைக்கேற்ப உணவினை தயார் செய்து ,உணவில் சம அளவு புரதங்கள், தாதுக்கள் உள்ள படி கீரை, முட்டை, அசைவம், பட்டாணி ஆகியவற்றை உள்ளடக்கி தயாரித்து வழங்கினோம் . இந்த உணவுகள் புதிதாக தயாரிக்கப்பட்டு அப்போதே வழங்கப் பட்டன , மிக முக்கியமாக சுவையாக இருந்ததால் அனைவராலும் விரும்பப்பட்டது” என தெரிவித்தார் .
மேலும் பாதுகாப்பான உணவு வழங்கும் முறை குறித்து கூறும் போது ,” உணவுகளை தயாரித்து சிறந்த தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்து வழங்குகினோம் .முதலில் பொருட்களை வாங்குவதில் மாபெரும் சவாலை சந்தித்தோம் . முதல் மாதத்தில் பொருட்கள் பற்றாக்குறையை எதிர்கொண்டோம் . பின்னர், நிறுவனங்களை தொடர்பு கொண்டு நேரடியாக கிடங்கிற்குச் சென்று பொருட்களை வாங்கி உணவை சமைத்தோம் .பாதுகாப்பில் ஒருபோதும் சமரசம் செய்யாமல் தயாரிக்கும் உணவுவில் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு செய்து வருகிறோம் “என்று கூறினார்.
தன்னுடைய வெற்றிக்கான காரணம் குறித்து கூறும் போது ,”மிகவும் உற்சாகமான சக சமையல் கலைஞர்களை கொண்டிருப்பதாலும் , இந்த சேவை செய்வதில் மகிழ்ச்சி கொள்வதும் தான் காரணம்.முன்கள பணியாளர்களான போர்வீரர்கள் தங்கள் கடினமான நாளின் முடிவில் சுவையான மற்றும் சுகாதாரமான உணவை உண்ண நாங்கள் எங்களால் முடிந்ததே செய்தோம் “என எளிமையுடன் கூறுவது வியப்படைய செய்கிறது .
Podcast: Play in new window | Download