து .மு .சுதர்சனராஜு
வேலைவாய்ப்பு என்பது அனைவருக்கும் தேவையான ஒன்று மற்றும் அடிப்படை தேவைக்கு நிகரானது. தற்போது கடந்த 5 மாத இக்கட்டான சூழ்நிலையால் பல்வேறு மக்கள் தங்கள் வேலைவாய்ப்பினை இழந்துள்ளனர் .
இதில் இருந்து மீண்டு வர ,“இளம் சமையல்கலைஞர்களுக்கான வாய்ப்புகள்” குறித்த இணையவழி கலந்துரையாடல் நிகழ்ச்சியானது தென்னிந்திய சமையல்கலைஞர்கள் சங்கமும் சினர்ஜி எக்ஸ்போசர்ஸ் ( Synergy Exposures) வும் ஒருங்கிணைந்து வழங்கியது .இதில் முக்கியமாக இளம்சமையல்கலைஞர்கள் தங்களை வருங்காலத்தில் எவ்வாறு தொழிலில் மேம்படுத்தலாம் என்பதை பல்வேறு சாதனைகளை புரிந்த சமையல்கலைஞர்கள் சேர்ந்து வழங்கினர்.சர்வதேச இளைஞகள் தினத்தை முன்னிட்டு இந்த இணைய கலந்துரையாடல் நிகழ்ந்ததால் சமையல் கலைஞர்கள் தங்களை சுயதொழிலில் முன்னேற்றம் அடைய பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கினர் .
தென்னிந்திய சமையல்கலைஞர்கள் சங்க தலைவர் முனைவர் கே தாமோதரன் தெரிவிக்கையில் ,”இந்த தொற்று நோயெல்லாம் விரைவில் குணமாகி ,பழைய நிலை விரைவில் வந்து விடும். எனவே இளம்சமையல் கலைஞர்கள் சுயதொழில் மற்றும் உணவு நுட்பங்களை கற்று கொள்வதில் முழு முயற்சியையும் ,புதிய சமையல் தொழில்நுட்பங்களை தெரிந்து கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும் ” என கூறினார் .திரு .காசி விஸ்வநாதன் புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி உணவு உருவாக்குதல் முறை குறித்து தெரிவித்தார் .மேலும் அவர் விவரிக்கையில் ,”சமையல்கலைஞர்கள் தினமும் சமூகத்தின் வளர்ச்சிக்கேற்ப தங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்,தற்போது உள்ள சூழ்நிலைகேற்ப உணவு தயாரிக்க வேண்டும்.இது என்றும் வளரும் துறை ,என்பதால் இளம்சமையல்கலைஞர்கள் உள்ளிருப்பு பயிற்சி (internship),அனுபவமிக்க சமையல் வல்லுநர்கள் உதவியுடன் மேம்படுத்துவது நல்லது “,என குறிப்பிட்டார் .
‘சமையல்கலையில் உள்ள வருங்கால வளர்ச்சி ‘ குறித்து முனைவர் எம் எஸ் ராஜ்மோகன் அவர்கள் பேசும்போது ,இளம் சமையல் கலைஞர்கள் வருங்காலத்தில் புதிய சமையல் தொழில்வளர்ச்சிக்கு தங்களை முன்னேற்றி கொண்டால் நிச்சயம் சுயதொழிலில் சாதிக்க நல்ல வழியாக இருக்கும் , தொழில் முனைவோர்கள் வாடிக்கையாளர்கள் தேவை புரிந்து செயல்படுவது அவர்களின் வெற்றிக்கான வழியாக இருக்கும் ” என கூறினார் .
சமையல்கலைஞர் உமாசங்கர் தனபால் உணவை அழகு படுத்துதல் மற்றும் புகைப்படம் எடுத்தல் குறித்த ஆலோசனைகளை வழங்கினர்.சுய தொழிலில் சாதிக்க நினைப்பவர்கள் உணவு புகைப்படத்திற்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்றும் முனைவர் திருலோக சந்தர் உணவு புகைப்படம் மற்றும் அதில் உள்ள வருங்கால சிறப்புகள் குறித்து விவரிகையில்,
“புகைப்படம் எடுப்பது என்பது உணவு சந்தை படுத்துவதில் மிக முக்கிய பங்கினை வழங்குகிறது .
உணவு தயாரிப்பதற்கு நிகராக உணவினை நல்ல புகைப்படம்தனை எடுப்பதற்கும் செலவிடுதல் நல்லது ,புகைப்படம் காரணமாக மக்கள் உணவு பொருட்களை விரும்புவர் என்பது சொல்லப்படாத உண்மை” என தெரிவித்தார் .
திரு அக்சய் குல்கர்னி அவர்கள் ,உணவு தயாரிப்பதில் உள்ள புதிய முறைகள் குறித்து கூறும் போது ,”தற்போது வீட்டு சமையலுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் ,வீட்டு சமையல் முறையில் வாடிக்கையாளர்களை ஈர்க்க முயலலாம் ,உணவினை சமைத்து ,குளிர்விக்கும் முறை நேரத்தை மிச்சப்படுத்தும் ,இதற்கான குளிர்விக்கும் உபகரணங்களை உணவகங்கள் வாங்க முன் வர வேண்டும் ,இது அவர்களுக்கு நல்ல முன்னேற்றத்தை வழங்கும் .இணையம் வழியாக இயங்கும் சமையல்துறை முறை மாபெரும் வெற்றியை பெறுவதால் தொழில் முனைவோர்கள் இதிலும் ஆர்வம் கொள்ள வேண்டும் “,என தெரிவித்தார் .
மேலும் இந்த இணைய கருத்தரங்கில் தானியங்கி நடைமுறை விரைவில் மேம்படும்,இது சுகாதாரத்தை அடுத்த கட்டத்திற்கு தானியங்கி நடைமுறை எடுத்து செல்லும் என அனைவராலும் தெரிவிக்கப்பட்டது .இளம் சமையல்கலைஞர்கள் சமையல்கலை தொழிலில் வெற்றி பெற சமையல் தொல்நுட்ப வளர்ச்சிக்கேற்ப தங்களை வளர்த்து கொள்ளுவது மிக முக்கியமானது என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது .