(Team ChefBharath.com always believe readers first. As an initiative, we are aiming to go hyper-local. We are pleased to introduce regional content and moving forward, we will be coming up with regional content in maximum Indian languages. Expecting the same support from the readers- B Swaminathan, Publisher, ChefBharath.com)
– நிதிஷ் குமார் (தமிழாக்கம் – து. மு. சுதர்சனராஜூ)
தென்னிந்தியாவில் சமையல் நிபுணர்களுக்கான முன்னணி மன்றமான தென்னிந்திய சமையல் சங்கம் (SICA) தென்னிந்தியா முழுவதும் சமையல் சமூகத்திற்காக தொடர்ச்சியான பட்டறைகளை நடத்த திட்டமிட்டுள்ளது. கோவிட்-19 முடிவடைந்த பின்னர் உணவகங்கள் மற்றும் உணவுத் தொழில் நிறுவனங்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் ஆகும்.
ஊரடங்கு காரணமாக பல துறைகள், முடங்கி உள்ளன. குறிப்பாக விருந்தோம்பல் தொழில் பேரழிவிற்கு உட்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் சமையல் கலைஞர்கள் வாடிக்கையாளர்களுக்கு எவ்வாறு பாதுகாப்பாக உணவை தயாரிக்க வேண்டும் என செஃப் பாரத்.காம் உடன் பேசிய SICA இன் பொதுச் செயலாளர் சீத்தாராம் பிரசாத், பின் வரும் கருத்துக்களைத் தெரிவித்தார்.
“நுகர்வோர் மத்தியில் மாறிவரும் போக்குகளைக் கருத்தில் கொண்டு, எங்கள் வணிகத்தை மாற்றுவது முக்கியம். அமர்வுகள் எங்களுக்கு உணவு வணிகத்தைப் பற்றிய புதிய யோசனைகளைத் தரும். மற்றும் பாதுகாப்பான உணவு தயாரிக்கும் வழி முறைகளை பின்பற்ற உதவும் “.
ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் இவையே ஒவ்வொரு உணவு நிறுவனமும் பின்பற்ற வேண்டிய முக்கியமான கடமையாகும். உண்பவரின் ஆரோக்கியத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். அடுத்து கொரோனா நோய்க்கிருமி பரவுவதைத் தவிர்க்க சுகாதாரமான உணவு உண்பது அவசியமாகும்.
வாடிக்கையாளர்களிடையே சமூக இடைவெளியினை முறையாக பின்பற்ற வேண்டும். மேலும், ஒவ்வொரு ஹோட்டலும் உணவு தயாரிக்கும் போது அரசாங்க விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று கூறினார்.
விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டுமா இல்லையா என்பதை உறுதிப்படுத்த அரசாங்க அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வர வேண்டும். வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதன் அவசியத்திற்கு ஏற்ப அவர்கள் வழிமுறைகள் வகுக்க வேண்டும்.
கோவிட் -19 க்குப் பின் உணவகங்கள் எவ்வாறு தங்கள் வணிகத்தை நடத்த முடியும் என்பது பற்றி உணவு வல்லுநர்களைக் கொண்டு SICA திட்டமிட்டுள்ளது. முதல் நிகழ்ச்சி உணவு பாதுகாப்பு பயிற்சியாளரான பி.ஜி.சத்யாவுடன் தொடங்கப்பட்டது. உணவு பாதுகாப்பு சேவைகள் சர்வதேச (FSSAI) உறுப்பினராக 20 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். அவர் உணவுப் பாதுகாப்பு தொடர்பான பல விளக்கங்களையும் கூறினார்.
“பலருக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் ஒரு கேள்வி உள்ளது. ஒரு சமையல்கலைஞர் என்ற முறையில், மக்களை ஆரோக்கியமாக மாற்றும் சில உணவுப் பொருட்களை நான் பரிந்துரைக்க விரும்புகிறேன். ”
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான சில முக்கிய வழிகள்
1.ஒரு நபரின் தேவையின் அடிப்படையில் சத்தான உணவை உட்கொள்வது.
2. அத்தியாவசிய ஊட்டச்சத்து உணவுப் பொருட்களான பழங்கள், காய்கறிகள், கொட்டைகள், இஞ்சி போன்றவற்றை உட்கொள்வது .
3. புரதச்சத்து நிறைந்த பொருட்களை உட்கொள்வது நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் .
ஊரடங்கு முடிவடைந்த பின் இந்த தகவல் மற்றும் பட்டறைகள் தொடரும். குறிப்பாக இது அனைத்து சமையல்கலைஞர்களுடையே விழிப்புணர்வை உருவாக்குவதற்கும் கூடுதல் தகவல்களை வழங்குவதற்கும் உறுதுணையாக இருக்கும் என தெரிவித்தார்.