து .மு.சுதர்சனராஜு
கொரோனா என்னும் தீயநுண்ணுயிர் தொற்று மனித வர்க்கத்தையே பாதித்துள்ளது.இதில் விருந்தோம்பல் துறை பல்வேறு பொருளாதார இழப்பினை சந்தித்துள்ளது.கொரோனாக்கு பிந்தைய காலத்தில் விருந்தோம்பல் துறையில் உள்ள மனிதவள சவால்கள் குறித்து மும்பை ஐடிஎம் ஹோட்டல் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் துணை முதல்வர் சஞ்சு முரளிதரன் அவர்கள் கூறியதாவது ,
“நிறுவனத்தின் எதிர்காலம் என்பது பல்வேறு பணியாளர்களின் சிறந்த கட்டமைப்பு பொருத்தே அமையும்.வணிகஉத்தி ஒரு சிறந்த வருங்காலத்திற்கான அடித்தளம் ஆகும்”. உடல்நலம், மருத்துவ உபகரணங்கள் உற்பத்தி போன்ற துறைகள் திடீரென ஒரு வலுவான எழுச்சியை சந்தித்து உள்ளது. மறுபுறம் உணவுத்துறை மற்றும் விருந்தோம்பல் துறை மோசமான பாதிப்பினை சந்தித்துள்ளது.இதுவரை 10.4 சதவீதத்திற்கும் மேலாக உலகளாவிய பங்களிப்புக்கு பொறுப்பாக இருந்த இத்துறைகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மிகவும் பாதிப்பினை சந்தித்துள்ளது என்றார்.நெருக்கடியின் அளவு மற்றும் தாக்கம் முன்னோடியில்லாத வகையில் உலக அளவில் சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் வருகையில் 20-30% வீழ்ச்சியடைந்துள்ளதே இதனை உணர்த்தும் .
பல உலகளாவிய உணவு நிறுவனங்கள்(UNWTO) மனிதவளத்தை மேம்படுத்த சில வலுவான நடவடிக்கைகளை எடுக்க நிர்பந்திக்கிறது. இந்த நடவடிக்கைகளை நிறைவேற்றுவதற்கு விடாமுயற்சி வேண்டும் என உறுதியுடன் கூறினார் .மேலும் “மனிதவளங்கள் விருந்தோம்பல் அமைப்பின் முக்கிய நரம்புகள்” அவற்றை நல்முறையில் கையாள்வது முக்கியம். இதற்கு ஒரே மந்திரம் என்னவென்றால், “மறுமலர்ச்சிக்கு முன் உயிர்வாழ்வது” ஆகும் .அதனை கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அதில் முக்கியமானதாக உள்கட்டமைப்பு மேலாண்மைக்கு முக்கியத்துவம் தரவேண்டும்.
வீட்டிலிருந்து வேலைசெய்வதற்கு பணியாளர்களுக்கு தேவையான அனைத்து உள்கட்டமைப்புகளும் கருவிகள் உபகரணங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டும். இவற்றில் ஏதேனும் இல்லாதது உற்பத்தி மற்றும் மனிதனின் நேரத்தை வீணாகிவிடும்.மனித வளத்தில் சில தீவிரமான மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்றார் .
வேலைவாய்ப்பு ஆதரவுதனை ஊழியர்களுக்கு வழங்க வேண்டும். தனது ஊழியர்களுக்கு திறன் தொகுப்பு மற்றும் தகுதியின் அடிப்படையில் துறைகளில் தற்காலிக / நிரந்தர வேலைவாய்ப்பை வழங்குவதன் மூலமும் .ஒப்பந்த வேலைவாய்ப்புதனை மேற்கொள்வது மூலமும் இதனை சரி செய்யலாம்.
விருந்தோம்பல் துறையில் வருங்காலத்தில் உள்ள வேலை வாய்ப்புகள் பற்றி OnTime Job நிறுவனத்தை சேர்ந்த , உதவி துணைத் தலைவர் -சிராக் அகர்வால் பின்வரும் கருத்துக்களை கூறினார் .
“இந்த தொற்றுநோயில் மிக மோசமான பாதிப்புக்குள்ளானது விருந்தோம்பல் துறை என்பதால், சரியான வேலையைக் கண்டுபிடிப்பது நிச்சயமாக கடினமாகிவிடும், போட்டி அதிகமாகிவிடும். தங்களை தினமும் விருந்தோம்பல் மற்றும் உணவுத் துறை சார்ந்த போக்குகேறறவாறு ஊழியர்கள் தங்களை மேம்படுத்த வேண்டும் .ஊழியர்களுக்கு தொழில்சார்ந்த முன்னேற்றம் மற்றும் அறிவுரீதியான முன்னேற்றம் தேவைப்படும் “என தெரிவித்தார்.
கொரோனாக்கு பிந்தைய காலத்தில் விருந்தோம்பல் துறையில் மனிதவள சவால்கள் அதிகம் உள்ளன.எதிர்மறையான பணியமர்த்தல் போக்கு ஏற்கனவே நாட்டில் 91% ஆக பதிவாகியுள்ளது. பணியமர்த்தல் சவாலாக இருக்கப்போகிறது மனிதவளத்துறை நிறைய புதிய திறமைகள் கொண்டவருக்கே வாய்ப்புகளை வழங்க நேரிடும்
முழு பொருளாதார நெருக்கடியையும் மனதில் கொண்டு இனி வரும் காலம் செயல்படும் என்பதில் சந்தேகமில்லை . உலகெங்கிலுமுள்ள விருந்தோம்பல் துறை மக்களின்
நம்பிக்கையை பெற வேண்டுமெனில் சுகாதாரமான முறைகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்றார் .
“விருந்தோம்பல் தொழில் என்பது மனிதவளத் தேவைகளை அதிகம் கொண்ட தொழிலாகும், எனவே பணியாளர்களின் அக்கறை சார்ந்த போக்கிற்கு முக்கியம் தர வேண்டும்” என முரளிதரன் தெரிவித்தார்.மேலும் ஊழியர்களின் செயல்பாட்டு வரைபடத்தை மனிதவளம் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்.தனிப்பட்ட ஊழியரின் ஒட்டுமொத்த செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறன் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் தர வேண்டும் .”
வெகுவான பணிநீக்கங்கள் இனி வரும் காலங்களில் சரி ஆகும் . 2022 க்குள் 2020 க்கு முந்தைய நிலைகளை எட்டும் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை . மிகப்பெரிய தேவை வருங்காலத்தில் உணவு பராமரிப்புத் துறையில் ஏற்படும் .அப்போது அதற்கு ஏற்றவாறு தங்களை வடிவமைத்த பணியாளர்களுக்கே நல்ல வாய்ப்பு கிடைக்கும் என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.