து .மு .சுதர்சனராஜு (cbdesign@imaws.org)
51 ஆண்டுகளுக்கு முன்பு, எம்.எஸ்.ஹாஜா முகைதீன் என்பவரால், ஒரு டீக்கடையாகத் தொடங்கப்பட்ட ‘வைர மாளிகை’, படிப்படியாக உணவகமாக மாறி தற்போது மிகவும் சிறப்புடன் செயல்பட்டு வருகிறது . பரோட்டாவும் நாட்டுக்கோழி பொரியலும் இப்போது திருநெல்வேலியின் அடையாளமாக வைரமாளிகை கொண்டு வந்துள்ளது. நிகழ்கால சமையலறையும் செயல்படுத்தி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை வைரமாளிகை பெற்று திகழ்கிறது.நாட்டுக்கோழி பிரியாணி, நாட்டுக்கோழி ஆனியன் ஃப்ரை, நாட்டுக்கோழி சாப்ஸ், நாட்டுக்கோழி சுக்கா எனத் திருநெல்வேலிச் சீமையின் நாட்டுச்சுவையை வழங்கி கொண்டிருக்கிறது ‘வைரமாளிகை’.
வைரமாளிகையின் உரிமையாளர் அப்துல் நியாஸ் அவர்கள் உணவகத்தின் வெற்றிக்கான காரணம் குறித்து கூறும் பொழுது, “மக்களுக்கு சுவையான, தரமான உணவினை வழங்க வேண்டும் என்பதை எனது தந்தையிடம் நான் கற்றேன், அதனை கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக திறம்பட செய்து வருகின்றேன் ,சிறு கடையாக ஆரம்பித்து மக்களுக்கு தரமான உணவினை வழங்கி வளர்ச்சி அடைந்துள்ளோம்” என்றார்.
தங்களின் உணவக சுவை குறித்து கூறும்போது ,” வீட்டில் அரைத்த மசாலாக்களை கொண்டுதான் உணவுகளை தயாரிக்கிறோம். பாக்கெட் மசாலா மற்றும் பதப்படுத்தப்பட்ட எண்ணெய் இவற்றை முற்றிலுமாக தவிர்க்கின்றோம், ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே தயாரிப்பதால் மக்கள் மத்தியில் வரவேற்புடன் திகழ முடிகிறது”என தெரிவித்தார் .
கொரோனா காலத்தில் எதிர்கொண்ட சவால்களை தெரிவிக்கையில் , ” உணவகங்களுக்கு இது மிகப்பெரிய இன்னலான காலகட்டம். அதில் நானும் விதிவிலக்கல்ல, இருந்தபோதும் நான் என்னுடைய உணவக தொழிலாளர்கள் நலனில் அதிக அக்கறை செலுத்தி அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படா வண்ணம் செயல்பட்டேன் , 200க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிகிறார்கள் அவர்களுக்கு முடிந்தளவு அனைத்து உதவிகளையும் செய்தேன் . தற்போது படிப்படியாக முன்னேறி வருவதால் பிரகாசமான நல்ல நிலைமையை நோக்கி சென்று கொண்டு இருக்கின்றோம் ” என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
வைரமாளிகையானது சிறந்த அசைவ உணவகத்திக்கான பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது. மக்களுக்கு பாரம்பரியமான அசைவ உணவுகளை சுவையாக தயாரித்தும் புதிய தொழில்நுட்பமான நிகழ்கால சமையலறை முறையையும் கொண்டுவந்து மக்கள் மத்தியில் மிகுந்த நன்மதிப்பை பெற்றுள்ளது என்பதில் மிகையில்லை .இந்த நேரடி சமையலறை முறையின் மூலம் மக்களுக்கு உணவத்தின் மீது மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
“நாட்டுக்கோழி பிரியாணிக்கு நெய், நாட்டுக்கோழி பொரிக்க தேங்காய் எண்ணெய். மற்ற உணவுகளுக்குக் கடலை எண்ணெய் என மிகவும் ஆரோக்கியமான உணவுப் பொருட்களை தேர்ந்தெடுத்து செய்கின்றோம். வாடிக்கையாளர்களின் நலனே எங்களது வெற்றி” என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
மக்களுக்கு நல்ல உணவினை வழங்க வேண்டும் என்ற எண்ணம் ,உணவு தொழில் குறித்த அறிவு மற்றும் உழைப்பு இருந்தால் வருங்கால சமுதாயம் நிறைய சாதிக்கலாம் என புத்துணர்ச்சியுடன் தெரிவித்தார்.
விளம்பரம் : இக்கட்டுரையை உங்களுக்கு வழங்கியவர்கள் ‘மசாலா ஷெப்‘ (தில்லை’ ஸ் மசாலா தாய் நிறுவனமான VPSA பரமசிவ நாடார் குழுமத்தின் மற்றொரு படைப்பு. இலவச மாதிரிகளை (samples) பெற அழைக்க +91 7397731654 அல்லது எங்களிடம் தொடர்பு கொள்ள : https://www.facebook.com/masalachef.in