து .மு .சுதர்சனராஜு
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தை வாளோடு முன் தோன்றிய மூத்த குடிமக்கள் வாழ்ந்த தமிழ்நாட்டில் இருந்துதான் நாகரீகமாக இருந்தாலும் சரி, உணவுக் கலாச்சாரமாக இருந்தாலும் சரி உலகம் முழுக்க எடுத்துச் சென்றதற்கான மிகப்பெரிய ஆதாரங்கள் உள்ளது.இந்த உணவு சார்ந்த கலாச்சாரம் உணவையே மருந்தாக பயன்படுத்திய தன்மை, அதன் பாங்கு எல்லாமே தமிழர்களுடைய வாழ்வியல் முறையில் அமைந்துள்ளது .உணவு சார்ந்த விழிப்புணர்வு தற்போது மதுரை மக்களிடையே அதிகரித்து வருவதாக மதுரை குமார் மெஸ் உரிமையாளர் திரு .ராமச்சந்திர குமார் தெரிவித்தார்.
அசைவ உணவில் வெற்றிக் கொடி கட்டியிருக்கும் தல்லாகுளம் குமார் மெஸ் தனித்துவமானது. மதுரையில் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்புடன் செயல்பட்டு வருகிறது.மட்டன் தோசை, இட்லி-குடல் குழம்பு, தோசை -அயிரை மீன் குழம்பு,எலும்பு வறுவல்,நண்டு ஆம்லெட் என பல்வேறு சிறப்பான உணவுகளை தயாரித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
தங்களின் வெற்றிக்கான காரணம் குறித்து குமார் மெஸ் உரிமையாளர் திரு .ராமச்சந்திர குமார் கூறும் போது,”பதப்படுத்தப்பட்ட உணவுகளை அறவே தவிர்த்து,அன்றாடம் தயார் செய்யும் மசாலாக்கள் மற்றும் இறைச்சிகளை மட்டுமே பயன்படுத்துவதால் சுவையும் மணமும் அதிகரிக்கின்றது.மட்டன் பிரியாணி . நாட்டுக்கோழி குழம்பு என செட்டிநாடு முறையில் தயாரிப்பதால் வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்புகிறார்கள்.” என்றார்
தினமும் உணவகங்கள் வளர்ந்துவரும் சூழலில் தனித்துவமாக செயல்படுவதுகுறித்து தெரிவிக்கும்போது, “மக்களின் தேவை அறிந்து அவர்களின் விருப்பப்படி செயல்பட்டு உணவுகளை தயாரிப்பதால் மக்கள் மத்தியில் புகழுடன் திகழ முடிகிறது.வாடிக்கையாளர்களே நம்முடைய சொத்து என்பதால் அவர்களுக்கு ஏற்றவாறு அவர்களின் நலனைப் பேணும் வகையில் செயல்பட்டு வருகின்றோம். அனைத்து உணவகங்களை போல உணவுகளை தயாரிக்காமல் புதுமையாகவும் அதே நேரத்தில் சுவை அதிகமாக இருக்கும் பாரம்பரிய உணவுகளை தயாரிக்கிறோம்.வெங்காயத்தின் கடும் விலை ஏற்றம் மற்றும் பல்வேறு உணவுப் பொருட்களில் விலை கூடும் பொழுது கூட அதனை சிறிதும் தவிர்க்காமல் தினமும் சமைக்கின்றோம். வீட்டிலேயே அரைத்த மசாலாக்களை உபயோகிப்பதால் உணவுகள் தனித்துவமாக விளங்குகிறது .பாக்கெட் மசாலாக்களை ஒரு போதும் உபயோகிப்பது இல்லை என்றார்.” என தெரிவித்தார்.
வரும் காலங்களில் மக்களிடையே ஏற்படும் உணவு மாற்றம் குறித்து கூறும் பொழுது,”துரித உணவுகளுக்கு அதிக முக்கியத்துவம் தரும் இந்த காலத்தில் நாங்கள் அதற்கு பதிலாக நமது பாரம்பரிய உணவு அதிக முக்கியத்துவம் தருகிறோம். ஆட்டுக்கால் சூப் ,செட்டிநாட்டு மட்டன் வகைகள்,நண்டு ஸ்பெஷல் வறுவல் என பல்வேறு உணவு வகைகளை தினமும் தயாரித்து வழங்குகிறோம். மக்கள் ஆரோக்கியமான உணவைத் தேடி வருவதால் எங்களால்வெற்றி அடைய முடிந்தது “என கூறினார்.
‘உணவுத் துறையில் என்றும் வெற்றி பெற முழு ஈடுபாட்டுடன் மக்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.நமது பாரம்பரிய உணவான பூண்டு.சோம்பு,மிளகு,கருவேப்பிலைபொடி ஆகியவற்றை அதிகம் சேர்த்துக் கொண்டால் நோய் நொடி இல்லாமல் வாழலாம் என்பதால் எங்களது அனைத்து உணவுகளிலும் இதனை அதிகம் சேர்க்கிறோம்” என்றார்.
விளம்பரம் : இக்கட்டுரையை உங்களுக்கு வழங்கியவர்கள் ‘மசாலா ஷெப்‘ (தில்லை’ ஸ் மசாலா தாய் நிறுவனமான VPSA பரமசிவ நாடார் குழுமத்தின் மற்றொரு படைப்பு. இலவச மாதிரிகளை (samples) பெற அழைக்க +91 7397731654 அல்லது எங்களிடம் தொடர்பு கொள்ள : https://www.facebook.com/masalachef.in