து .மு .சுதர்சனராஜு (cbdesign@imaws.org)
‘உணவே மருந்து’ என்பது நம் சான்றோர்களின் கூற்று,தற்போது உள்ள இயந்திர வாழ்க்கை சூழலில் நமது பாரம்பரிய உணவுகள் பல மறைந்து வருகின்றன ,இந்த சூழ்நிலையில் மதுரை பாரம்பரியத்தை எடுத்து கூறும் உணவுகளை ஆறுமுகம் மெஸ் உரிமையாளர் திரு .ரமேஷ் அவர்கள் தயாரித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பினை பெற்று வருகிறார் .
மேலும் அவர் தங்கள் உணவுகளின் சிறப்பு குறித்து கூறுகையில்,” அனைத்து மக்களும் பரோட்டா மற்றும் பிரியாணி வகைகளை அதிகம் விரும்புகிறார்கள் என்பதால் நாங்கள் அதில் புதுமையாக மிளகு குழம்பு பரோட்டா,ஸ்பெஷல் மட்டன் பிரியாணி ஆகியவற்றை வீட்டு சுவை போன்று பாக்கெட் மசாலாக்கள் இல்லாமல் நாங்களே அரைத்த மசாலாக்களை பயன்படுத்தி தயாரிக்கிறோம்.தற்போது பெரும்பாலான உணவகங்கள் பாக்கெட்மசாலாக்களை உபயோகிக்கிறார்கள் இதனால் மக்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் வரக்கூடும்.ஆனால் நாங்கள் வீட்டிலேயே செய்த மசாலாக்களை உபயோகிப்பதால் சுவையும் மனமும் அதிகரிக்கிறது “என தெரிவித்தார்.
தங்களது உணவு சுவையான இருப்பதற்கான காரணம் குறித்து கூறும்போது,”தரமான உணவுகளை பெற உணவு பொருள்களின் தரம் மற்றும் அளவு முக்கியமானதாகும் . இதனை கருத்தில் கொண்டு நாங்கள் தூய செக்கு எண்ணை மற்றும் மசாலாக்களில் அதிகம் கவனம் செலுத்துகின்றோம் .பாரம்பரியமான மருத்துவ குணம் பொருந்திய பொருட்களான மிளகு, சீரகம், சோம்பு ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்க்கின்றோம் “என்றார்.
மேலும் நமது பாரம்பரியமான உணவுகள் மிகவும் உடலுக்கு நல்லது .தற்போது பெரும்பாலான மக்கள் மனநிலை துரித உணவு பக்கம் மாறி இருப்பது வேதனை அளிப்பதாக தெரிவித்தார் அதனை மீட்டெடுக்கும் வகையில் 100-க்கும் மேற்பட்ட நமது பாரம்பரியஉணவுகளை சமைத்து மக்களிடையே தனித்துவமான நமது உணவுகளை கொண்டு சேர்த்துள்ளோம், என தெரிவித்தார்.
கொரோனாக்கு பிந்திய காலத்தில் உணவக செயல்பாடு பற்றி கூறும் பொழுது,”கொரோனா காலகட்டத்தில் பல்வேறு இன்னல்களை சந்தித்து விட்டோம் .இன்னும் பழைய நிலைமையானது திரும்பவில்லை என்பது உண்மை .இருந்த போதும் மக்களுக்கு ஆரோக்கியமான உணவுவிணை வழங்க நாங்கள் உழைத்துக் கொண்டு இருக்கின்றோம். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மஞ்சள் , பூண்டு போன்ற நமது பாரம்பரிய உணவுப் பொருட்களை முன்பைவிட அதிகம் உபயோகித்து வருகின்றோம்” என்றார்.
உணவகத்தின் வெற்றி குறித்து கூறும் பொழுது,”ஒவ்வொரு உணவிலும் நாங்கள் தனித்துவமாக இருக்க வேண்டும் என்பதற்காக நமது பாரம்பரியமான முறையைப் பயன்படுத்துகிறோம். அதனை மக்கள் அதிகம் விரும்புகிறார்கள் பெரும்பாலும் சமையல்தனை நானே கவனித்து அனைத்தையும் பக்குவமாக மக்கள் விரும்பும் வண்ணம் செய்வதால் வெற்றி பெற முடிந்தது,துரித சேவையோடு தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட வகைகளில் உணவினை தயாரித்து தருவதால் மக்கள் எங்களிடம் விரும்பி வருகிறார்கள், “என்றார்.
கொரோனாக்கு பிந்திய காலமான தற்பொழுது மக்கள் தரமான உணவு வகைகளை தயாரிக்கும் உணவகங்களுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் இது குறித்து உணவக உரிமையாளர்கள் அதிக அக்கறை செலுத்த வேண்டும் அப்போது தான் உணவகத்துறையில் நீடித்து நிலைக்க இயலும் என தெரிவித்தார்.
விளம்பரம் : இக்கட்டுரையை உங்களுக்கு வழங்கியவர்கள் ‘மசாலா ஷெப்‘ (தில்லை’ ஸ் மசாலா தாய் நிறுவனமான VPSA பரமசிவ நாடார் குழுமத்தின் மற்றொரு படைப்பு. இலவச மாதிரிகளை (samples) பெற அழைக்க +91 7397731654 அல்லது எங்களிடம் தொடர்பு கொள்ள : https://www.facebook.com/masalachef.in